தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக. 10 மற்றும் 17-ம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் முகாம் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் ஆக. 10-ம் தேதி அன்றும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் ஆக. 17-ம் தேதியும் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது.
இம்முகாமில் 1 - 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் (மாத்திரை) அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவம், 2 - 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 மில்லி கிராம் அளவுள்ள ஒரு மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படவுள்ளது.
இம்மாத்திரைகள் மூலம் குடற்புழு நீக்கப்பட்டு ரத்தசோகை ஏற்படுவதைத் தடுத்தல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும். எனவே, தேசிய குடற்புழு நீக்க நாளில் அனைத்து குழந்தைகளும் பங்கு பெற்று பயன் பெறலாம்.