ஒரத்தநாட்டில் மாற்றுத்திறனாளிகள் மௌன ஊர்வலம்

ஒரத்தநாட்டில் தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், வாய் பேசாதோர் நலச் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

ஒரத்தநாட்டில் தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள், காது கேளாதோர், வாய் பேசாதோர் நலச் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் காது கேளாத,  வாய்பேச முடியாத பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்,  மத்திய-மாநில அரசுகள் போக்ஸோ சட்டத்தை கடுமையாக்க வேண்டும், பெண் குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கடமை, பெண்குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் நடைபெற்ற இந்த மௌன ஊர்வலம் ஒரத்தநாடு பெரியார் சிலை பகுதியில்  தொடங்கி,  வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.