கும்பகோணம் கல்வி மாவட்ட குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி கும்பகோணம் பாணாதுறை விளையாட்டு மைதானத்தில் கடந்த 2, 3 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த போட்டியின் 19 வயது பிரிவில் 4 ஷ் 100 மற்றும் 4 ஷ் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கும்பகோணம் நேடிவ் பள்ளி முதலிடத்தை பெற்றது. இதேபோல, 100, 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இப்பள்ளியின் பிளஸ் 2 மாணவர் பகத்சிங்கும், 400 மீட்டர், தடை ஓட்டத்தில் பிளஸ் 2 மாணவர் அபிமணியும், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிளஸ் 2 மாணவர்கள் சண்முகசுந்தரம், துரைராஜ் ஆகியோரும், 3,000, 5,000 மீட்டர் ஓட்ட போட்டியில் பிளஸ்
2 மாணவர் முகேஷும் முதலிடம் பிடித்தனர்.
17 வயது பிரிவில் 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பிளஸ் 2 மாணவர் ஸ்டேன்ஸ் ஆரோக்கியராஜுவும், ஈட்டி எறிதல் போட்டியில் பிளஸ் 2 மாணவர் எட்வின் ராஜும், 1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர்
சந்திரசேகரனும் முதலிடம் பிடித்தனர். 4 ஷ்100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.
14 வயது பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கருணாமூர்த்தி முதலிடம் பிடித்தார். அதே மாணவர், குண்டு எறிதல், வட்டு எறிதல், 4 ஷ் 100 மீட்டர் தொடர் ஒட்டம் என்று 5 போட்டிகளில் முதலிடம் பெற்றும் தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கும்பகோணம் நேடிவ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி வென்று சாதனை படைத்தது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் அறிவழகன், உடற்கல்வி ஆசிரி யர்கள் முரளி, பாலமுருகன் ஆகியோரை கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் பாப்பம்மாள், பள்ளி செயலாளர் பிச்சுமணி, தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பாராட்டினர்.