தஞ்சாவூர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்பதற்குரிய நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வித் திட்ட மையத் தலைவர் ஆர். அனந்தராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போட்டி தேர்வுகளுக்கான "சாஸ்த்ரா அகாடமி பார் குரோத் அண்டு எக்ஸ்சலன்ஸ்" என்ற இலவச பயிற்சி மையத்தை 2012 ஆம் ஆண்டு சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிறுவியது.
இந்த நிறுவனத்தின் மூலம் வங்கிகள் மற்றும் மத்திய, மாநிலத் தேர்வாணையக் குழுக்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நடத்துவதற்காக சென்னையிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த அமைப்பின் சார்பில் நிகழாண்டு யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்குக்கான இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆக. 10-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், தொலைபேசி எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றை தலைவர், தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வித் திட்ட மையம் (சி.இ.இ.பி.), சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அல்லது 04362 - 304314 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது
freecoaching@sastra.edu என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஆக. 9-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.