தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கொடி நாள் நிதி ரூ. 30,000 வசூல் செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அனைவரிடமும் 2017 ஆம் ஆண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் செய்து தரும்படி ஆட்சியர் கோரியிருந்தார்.
இதன் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தில் கொடி நாள் நிதியாக ரூ. 30,000 வசூல் செய்யப்பட்டது. அத்தொகையை முன்னாள் படை வீரர் நல அலுவலக உதவி இயக்குநர் என். ராமச்சந்திரனிடம் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார், துணைப் பதிவாளர் கோ. பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.