கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. .
இதை முன்னிட்டு ஆலயத்தில் ஜெபமாலை, கொடி பவனி ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி எஸ். செபாஸ்டின் பெரியண்ணன் தலைமை வகித்து, ஆலய பெருவிழா கொடியை ஏற்றினார். இதையடுத்து கூட்டு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இதில் மறைமாவட்ட முதன்மை குரு தேவதாஸ், உதவி பங்கு தந்தையர்கள், திரளான பொதுமக்களும், பங்கு மக்களும் பங்கேற்றனர்.
இதைத் தெடர்ந்து வரும் 14 ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் மாலை திருப்பலியும், மாதாவின் சிறிய தேர் பவனி மற்றும் பாவ சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது. விழாவின் சிறப்பம்சமாக வரும் 14 ஆம் தேதி மாலை திருப்பலி மற்றும் மறையுரையை ஆயர் அந்தோணிசாமி நடத்துகிறார். பின்னர் இரவு புனித அலங்கார அன்னையின் தேர்பவனி நடைபெறுகிறது.