பிப். 24-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பிப். 24-ஆம் தேதி சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பிப். 24-ஆம் தேதி சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பு ஊசி மார்ச் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பிப். 24-ஆம் தேதி பகல் 11 மணியளவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேசிய கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் மார்ச் மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறையால் தெரிவிக்கப்படும் நாளில்,  இடத்தில், அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள், நான்கு மாதத்துக்கு மேற்பட்ட பசு மற்றும் எருமைக்கன்றுகளைக் கொண்டு வந்து கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com