தஞ்சாவூரில் ஏப். 26-இல் தேரோட்டம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

தஞ்சாவூரில் ஏப். 26-ஆம் தேதி பெரியகோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற 

தஞ்சாவூரில் ஏப். 26-ஆம் தேதி பெரியகோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:
தஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டம் ஏப். 26-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர் செல்லும் நான்கு ராஜ வீதிகளிலும் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் நான்கு ராஜவீதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  தேர் செல்லும் நான்கு வீதிகளில் வேகத்தடையை அகற்றி, தேர் சுற்றி வருவதற்குச் சம நிலையை ஏற்படுத்த வேண்டும்.  
சுகாதாரப் பணிகள் துறையினர் மூன்று அவரச ஊர்திகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதேபோல, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்க வேண்டும். 
தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் தேர் செல்லும் நான்கு ராஜ வீதிகளில் இடையூறாக உள்ள மின் கம்பிகளைத் தற்காலிகமாக அப்புறப்படுத்த வேண்டும். தெற்கு வீதியில் வளைவாக உள்ள அனைத்து மின் விளக்குக் கம்பங்களைத் தற்காலிகமாக மாற்ற வேண்டும்.  
கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தேரோடும் பாதையில் ஆக்கிரமிப்புகள் ஏதுமிருந்தால் ஐந்து நாட்களுக்கு முன்பாக அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com