நான்கு வழிச்சாலைக்கான இழப்பீட்டை ஆக. 31-க்குள் வழங்க அறிவுறுத்தல்

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணியில் இழப்பீட்டை ஆக. 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணியில் இழப்பீட்டை ஆக. 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர்இடையிலான நான்கு வழிச்சாலை பணிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 கிராமங்களில் நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், இதுவரை 10 கிராமங்களில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்த ஆட்சியர், மீதமுள்ள கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ஆக. 31-ம் தேதிக்குள் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஹரிகிருஷ்ணா, நெடுஞ்சாலை துறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தொழில்நுட்ப மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com