"வானொலி ஒலிபரப்பை கேட்டால் போட்டித் தேர்வில் பங்கேற்க உதவும்'

வானொலி கேட்டால் போட்டித் தேர்வில் பங்கேற்க உதவும் என்றார் சென்னை வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி. பழனிச்சாமி.

வானொலி கேட்டால் போட்டித் தேர்வில் பங்கேற்க உதவும் என்றார் சென்னை வானொலி செய்திப் பிரிவு இயக்குநர் வி. பழனிச்சாமி.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மாணவர்களுக்கான ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
கல்வியியல் பயிலும் மாணவர்கள் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும் செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வந்தால் உற்றுக்கேட்டலுக்கும், வெற்றுக்கேட்டலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியலாம். உச்சரிப்புத் தூய்மையிலும், தவறில்லாமல் படிக்கும் திறனிலும் பயிற்சி பெறலாம். போட்டித் தேர்வுகளில் பங்குபெற இது பெரிதும் உதவும். "
வானொலி கேள் என வ.சுப. மாணிக்கம் தன் புதிய ஆத்திசூடியில் கூறியதன் பெருமையை உணர வேண்டும். செய்தி வாசிப்பவர்கள் மக்கள் மனதில் இடம் பெறுகின்றனர். சக்ரபாணி, ஹரீஷ் அவஸ்தி, போரன்ஹெளதாத், லூட்டிகா ரத்னம் (ஆங்கிலம்), இசக்கி, ஜானகி, விஜயம், பஞ்சாபகேசன், செல்வராஜ் (தமிழ்) ஆகியோர் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனர். 
மொழிபெயர்க்கும் திறன், வானொலிக்கேற்ற குரல் வளம், உலக நடப்புகளில் அறிவு ஆகியவை உள்ளவர்களுக்குச் செய்திப்பிரிவின் கதவுகள் திறந்தே உள்ளன என்றார் பழனிச்சாமி. கல்வியியல் துறைத் தலைவர் என். சேஷாத்திரி, மன்றத்தின் செயலர் எஸ். ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com