ஒரத்தநாடு, பேராவூரணியில் கிராம மக்கள் மறியல்

ஒரத்தநாடு அருகே மின்சாரமில்லாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ஒரத்தநாடு அருகே மின்சாரமில்லாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு வட்டம், மேடையக்கொல்லை பகுதியில் கஜா புயல் பாதிப்பால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மின்சாரமில்லாததால் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மேடையக்கொல்லை புதுரோட்டில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு மற்றும் மண்டலக்கோட்டை பகுதியில் மின்சாரம், குடித்தண்ணீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டனர்.
பேராவூரணி: பேராவூரணி அருகே ரெட்டவயலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர். கஜாபுயலால் சேதமடைந்த வீடுகளை முறையாகக் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கஜாபுயல் தாக்கி 23 நாட்களாகியும் மின்சாரம் வழங்காததைக் கண்டித்தும், வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டுவதைத் தடுக்கக் கோரியும் இந்த மறியல் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த பேராவூரணி போலீஸார் மற்றும் சேதுபாவாசத்திர வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, விஏஓக்கள் பாண்டியராஜன், அஷரப் அலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் இன்னும் 2 நாள்களுக்குள் அனைத்து வீடுகளையும் முறையாகக் கணக்கெடுத்து நிவாரண பொருள் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் கடன் வாங்கிய தனியார் நிதி நிறுவனங்களின் பெயர்களை மனுவாக எழுதி கொடுத்தால் வட்டாட்சியர் மூலம் தீர்வு காணப்படும் என்றனர்.
மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர். மறியலால் சுமார்2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com