கூரை வீடுகளைச் சீரமைக்கஅதிராம்பட்டினத்தில் கூட்டமைப்பு தொடக்கம்

அதிராம்பட்டினத்தில் கஜா புயலால் சேதமடைந்த கூரை வீடுகளை புனரமைக்க 22 பேர் கொண்ட கூட்டமைப்பு தொடங்கப்பட் டுள்ளது.


அதிராம்பட்டினத்தில் கஜா புயலால் சேதமடைந்த கூரை வீடுகளை புனரமைக்க 22 பேர் கொண்ட கூட்டமைப்பு தொடங்கப்பட் டுள்ளது.
கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் எம்.ஓ. செய்யது முகமது புஹாரி, துணைத் தலைவர் பேராசிரியர் மவ்லவி. எம்.ஏ. முகமது இத்ரீஸ் ஆகியோர் சனிக்கிழமை கூறியது: கஜா புயலால் கடுமையாகப் பா திக்கப்பட்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உலமாக்கள், சமுதாய அமைப்புகள், பல்வேறு தன்னார்வலர்கள் மூலம் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்து, புயலால் சேதமடைந்த கூரை வீடுகளைச் சீரமைக்கும் பணிக்காக அதிரை கஜா புயல் புனரமைப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பில் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டமைப்பு சார்பில் 5 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்ட கூரை வீடுகளின் குடும்பத்தினரிடமிருந்து 300- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக அதிகமாக சேதமடைந்த 50 கூரை வீடுகளை புனரமைக்கும் பணிகளைத் தொடங்க உள்ளோம்.
புயலில் கூரை வீடுகளை இழந்தவர்கள் ஆங்காங்கே வீதிகளிலும், பிற இடங்களுக்கும் புலம் பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில், அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பில், உலமாக்கள் வழிகாட்டுதல் பேரில், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தற்காலிக ஏற்பாடாக இந்த கூட்டமைப்பை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் ஜாதி, மத, இன பேதமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களின் கூரை வீடுகளையும் கணக்கெடுப்பு செய்து, முதல்கட்டமாக கூரை வீடுகளை புனரமைக்கும் பணிக்காக வெளியூர்களிலிருந்து தென்னங்கீற்று, கம்பு, கயிறு, தகர ஷீட் ஆகியவற்றை வரவழைத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இப்பணிக்காக நிதியளிக்க விரும்புவோர் வசதிக்காக அதிரை கஜா சைக்ளோன் ரிலீப் பண்ட் என்ற பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நிதிக்குப் பதிலாக கீற்று, கம்பு, கயிறு, தகர ஷீட் போன்ற வீடு புனரமைப்பிற்கு தேவைப்படும் பொருள்களையும் நன்கொடையாக வழங்கலாம். நிதி வரவு ~ செலவு குறித்து தினமும் கூட்டமைப்பினர் ஒன்று கூடி ஆலோசித்து முடிவு செய்வர். நிதி வழங்குவோர் நோக்கத்திற்கு ஏற்பவும், பயனாளிகளுக்கு முழுமையாக சேரும் வகையிலும் முழு கண்காணிப்பில் ஒவ்வொரு செலவினங்களும் நேர்மையான முறையில் செலவிடப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com