பள்ளி பரிமாற்றத் திட்டம்புதுகை பள்ளி மாணவிகள் அக்கச்சிபட்டி பள்ளிக்கு வருகை

பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் புதுகை பள்ளி மாணவர்கள் 20 பேர் கந்தர்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு


பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் புதுகை பள்ளி மாணவர்கள் 20 பேர் கந்தர்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு சனிக்கிழமை வந்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கிராமப்புற பள்ளிக்கு நகர்ப்புற பள்ளி மாணவர்கள் வந்து கல்வி பயிலும் முறை, பண்பாடு, கலாசாரம் ஆகியவை குறித்து அறிந்து செல்வர்.
6 நாள்கள் நடைபெறும் இந்த பள்ளி பரிமாற்ற நிகழ்விற்கு புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து 20 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் கந்தர்வகோட்டை அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு வந்தனர். அக்கச்சிப்பட்டி பள்ளியின் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்விற்கு, வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மருத்துவர் த. சுவாமிநாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ராஜேஸ்வரி, வீராச்சாமி, ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமத்துல்லா, ஆனந்தராஜ், ராஜமாணிக்கம், பாக்யராஜ், நிவீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com