Enable Javscript for better performance
அதிராம்பட்டினத்தில் இன்று இஜ்திமா மாநாடு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள மைதானப் பகுதிகளில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட இஜ்திமா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.9) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு தொடங்கி, சனிக்கிழமை (பிப்.10) இரவு இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது.
    இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு இறை அச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள், சிறப்புப்
    பிரார்த்தனை ஆகியவை குறித்து சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர்.
    மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai