Enable Javscript for better performance
உம்பளப்பாடி கிராமத்தில் கோவில் திருப்பணி குழு ஆலோசனை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உம்பளப்பாடி கிராமத்தில் கோவில் திருப்பணி குழு ஆலோசனை கூட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி கிராமத்திலுள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை நிலாவணை மகாதேவர் திருக்கோவில் திருப்பணிக்குழு ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு திருப்பணி கமிட்டி தலைவர் டி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் நாகராஜன் மற்றும் கிராம நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருப்பணி வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். கூட்டத்தில், மே 13ஆம் தேதி கோவில் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், அது தொடர்பாக இந்து அறநிலையத் துறையினரின் ஒப்புதலை பெறுவது என்றும், கும்பாபிஷேக விழாவிற்கு சென்னை மகாலெட்சுமி சுப்ரமணியன், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் உள்ளிட்டோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai