Enable Javscript for better performance
கால்நடை மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
    விழாவை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கே.பாபு தொடக்கிவைத்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கூட்டு குடும்பங்கள் இல்லாத இந்த காலகட்டத்தில் வாழ்க்கைக்கு தேவையான விட்டுக் கொடுக்கும் தன்மை, எதையும் தாங்கக்கூடிய தன்மை மற்றும் தலைமை பண்புகளை வளர்க்க மாணவர்களுக்கு விளையாட்டு உதவுகிறது என்றார்.
    ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் க.ந.செல்வக்குமார் தலைமையுரை ஆற்றினார். முன்னதாக உடற்கல்வி செயலாளர் முனைவர். எஸ். முத்துகிருஷ்ணன் வரவேற்றார். உடற்கல்வி உதவி செயலாளர் எஸ். எழிலரசி விளையாட்டு ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். நிறைவில், இக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai