Enable Javscript for better performance
கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்: மாணவர்களைக் கண்டித்து பேராசிரியர்கள் சாலை- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்: மாணவர்களைக் கண்டித்து பேராசிரியர்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 09th February 2018 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அரசு கல்லுôரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரக் கோரி மாணவர்கள் தொடர்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது பேராசிரியர்களை கல்லூரிக்குள் விட மறுத்த மாணவர்களைக் கண்டித்து பேராசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம் அரசு ஆடவர் கல்லுôரியில் உள்ள வேதியியல் பாடப்பிரிவு கட்டடம், ஆய்வுக்கூடத்தை சீரமைக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அறையின் முன்பு மாணவர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து கல்லுôரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் மாணவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கல்லுôரிக்குள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில் வியாழக்கிழமை காலை கல்லுôரி நிர்வாகம் மாணவர்களை உள்ளே அனுமதிக்காததால், ஆத்திரத்தில் இருந்த மாணவர்கள், கல்லூரி கதவினை பூட்டி கல்லுôரி பேராசிரியர்களை உள்ளே விட மறுத்தனர். இதனால் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர்கள் கல்லூரி வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேராசிரியர்கள் தங்களது கார்களை கல்லணை - பூம்புகார் சாலையின் குறுக்கே மறித்து நிறுத்தியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தகவலறிந்து அங்கு வந்த கல்லுôரி கல்வி மண்டல இணை இயக்குநர் மனோகரன், டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையிலான போலிஸார் மறியல் செய்த போராசிரியர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேராசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    தொடர்ந்து இணை இயக்குனர், போராட்டம் செய்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாணவர்களின் கோரிக்கைகளை வரும் பிப். 28 ஆம் தேதிக்குள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்ததன் பேரில் மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டமும் கைவிடப்பட்டது.
    தேவையான வசதிகள் செய்து தரப்படும்
    இதுகுறித்து கல்லுôரி கல்வி மண்டல இணை இயக்குநர் மனோகரன் கூறுகையில், கல்லூரியின் வேதியியல் பிரிவு கட்டடத்தையும், அடிப்படை வசதிகளையும் வரும் பிப். 28 ஆம் தேதிக்குள் சீர் செய்து தரப்படும். பேராசிரியர்களையும் சமாதானப்படுத்தியுள்ளோம். வரும் பிப். 12-ஆம் தேதி முதல் கல்லுôரி தொடர்ந்து செயல்படும்.
    இக்கல்லுôரிக்கு ரூசோ திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் 15 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    மேலும், இன்டாக்ட் அமைப்பு சார்பில் ரூ. 17 கோடி நிதி வரவுள்ளது. அந்த நிதி வந்தவுடன் வரும் 2 ஆண்டுக்குள் இக்கல்லுôரியின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai