Enable Javscript for better performance
செருவாவிடுதியில் இதயநோய் கண்டறிதல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி காவேரி இதய மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதயநோய் கண்டறிதல், பிறவி ஊனம், அன்னப்பிளவு கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.தமிழ்ச்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.அங்கயற்கண்ணி, சமூக ஆர்வலர்கள் ஏசிஇ அறக்கட்டளை தலைவர் கே.அடைக்கலம், தென்னங்குடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    திருச்சி காவேரி இதய மருத்துவமனை சிறப்பு இதய அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆன்டோ சகாயராஜ், சரண்யா ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமில், சுகாதார நிலைய மருத்துவர்கள் தீபா, ரஞ்சித், சிவரஞ்சனி, கோகிலா, கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், பூவாணம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிச்சிறார் நலத்திட்ட மருத்துவக் குழு மூலம், இருதய நோய் அறிகுறி கண்டறியப்பட்ட 150 குழந்தைகளுக்கு முகாமில் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டதில், 52 குழந்தைகளுக்கு கோளாறு கண்டறியப்பட்டு முதல்கட்டமாக 20 குழந்தைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி காவேரி இதய மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மாதவன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai