Enable Javscript for better performance
திருப்பாலைத்துறை சப்த மாதாக்கள் கோவிலில் அஷ்டமி வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பாலைத்துறை சப்த மாதாக்கள் கோவிலில் அஷ்டமி வழிபாடு

    By DIN  |   Published on : 09th February 2018 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை கிராமத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு சப்த மாதாக்கள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி புதன்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    திருப்பாலைத்துறையில் அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் திருக்கோவிலின் தென்கிழக்கில் அக்னி மூலையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சப்த மாதாக்கள் திருக்கோவிலில் உள்ள மகாகணபதி, வீரபத்திரர், பிராமி, வைஷ்ணவி, மகேந்திரி, கெளமாரி, வராஹி, சாமுண்டி, இந்திராணி உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தூப,தீப,நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றன.
    இதேபோல், தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை அருள்மிகு பாலைவனநாதர் கோவிலில் அருள்பாலித்து வரும் இரட்டை பைரவர்களுக்கு பால், தேன், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai