Enable Javscript for better performance
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 'எனது அஞ்சல்தலை' சிறப்புக் கவுன்ட்டர் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 'எனது அஞ்சல்தலை' சிறப்புக் கவுன்ட்டர் தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 'எனது அஞ்சல் தலை' (மை ஸ்டாம்ப்) சிறப்புக் கவுண்டர் தொடக்க விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பைவ் ஸ்டார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் டி.லதா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ்.பஞ்சாபகேசன் பேசியது:
    'எனது அஞ்சல் தலை' பெற ரூ.300 செலுத்தி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் விண்ணப்பித்து, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கொடுத்து அன்றே தங்கள் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதை தபாலில் ஒட்டி அனுப்பவும் பயன்படுத்தலாம். தற்போது பொதுமக்கள் விரைவாக பெற்றுச் செல்வதற்காக மை ஸ்டாம்ப் ஷீட் பிரிண்ட் செய்யும் வசதி பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்திலேயே செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டுக்கோட்டை கோட்டத்திலுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் தபால்களை அனுப்பும் வசதியை பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    பட்டுக்கோட்டை மேற்கு உள்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கிழக்கு உள்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் கே. சிவசங்கரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி டி. உமா வரவேற்றார். கோட்ட துணை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.கந்தசாமி நன்றி கூறினார்.
    ஏற்பாடுகளை கணினி மேலாளர் ராஜேந்திரன், வணிக விரிவாக்க அலுவலர் ஜெரால்டு சகாயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai