Enable Javscript for better performance
பேராவூரணி அருகே பள்ளிக் கட்டடம், அங்காடி மையம் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகே பள்ளிக் கட்டடம், அங்காடி மையம் திறப்பு விழா

    By DIN  |   Published on : 09th February 2018 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணியை அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் மற்றும் அங்காடி கட்டடத்தை எம்எல்ஏ கோவிந்தராசு அண்மையில் திறந்து வைத்தார்.
    பின்னவாசல் ஊராட்சியில் எம்எல்ஏ பரிந்துரையின் அடிப்படையில், நபார்டு நிதி உதவியுடன் ரூ. 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில், 6 வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகம்,
    சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
    மேலும், 8 லட்சம் மதிப்பில் அங்காடி கட்டடம் கட்டப்பட்டது.
    பள்ளிக் கட்டடம், அங்காடி ஆகியவற்றை எம்எல்ஏ கோவிந்தராசு திறந்து வைத்தும், ரூ. 3 லட்சம் மதிப்பிலான இருக்கை மற்றும் தளவாடப் பொருள்களை வழங்கி பேசினார்.
    நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ரெங்கநாதன், ஆசிரியர் திருநாவுக்கரசு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெரியய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai