Enable Javscript for better performance
பொலிவுறு நகரம்: 2050 ஆம் ஆண்டு தேவைக்கு ஏற்ப திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாநகரின் 2050 ஆம் ஆண்டு தேவையை நிறைவேற்றும் விதமாக பொலிவுறு நகரத் திட்ட மதிப்பீட்டைத் தயாரிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
    ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சியைப் பொலிவுறு நகராக மாற்றுவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது:
    தஞ்சாவூர் மாநகரின் மையப் பகுதி 36.33 சதுர கி.மீ., விரிவாக்கப் பகுதி 110.40 சதுர கி.மீ. என மொத்தம் இம்மாநகரம் 146.73 சதுர கி.மீ. கொண்டது.
    இம்மாநகரை 2050 ஆம் ஆண்டு மக்கள் தேவைக்கேற்ப குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டைத் தயாரிக்க வேண்டும்.
    மாநகராட்சிப் பகுதியில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கேற்ப கூடுதல் குடிநீர் ஆதாரம் கண்டறிதல், புதிதாக நீர் உந்து குழாய் அமைத்தல், புதை சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துதல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் மறு சுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்துதல் தொடர்பாகவும்,
    மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளது என்றார் ஆட்சியர்.
    கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் (பொ) காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai