Enable Javscript for better performance
மதுக்கூர் அருகே மனைவி கொலை: கணவர் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்ரமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (30). இவர் மனைவி மனுஷியா (24), பி.எஸ்.சி. பட்டதாரி. 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
    ஆரம்பத்தில் தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றிய விக்னேஷ்வரன் தற்போது கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மனுஷியா மதுக்கூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் கேரளத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த விக்னேஷ்வரனுக்கு மனுஷியாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதன்கிழமை இரவு தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது ஆத்திரமடைந்த வினேஷ்வரன் வீட்டிலிருந்த கத்தியால் மனுஷியா நெஞ்சில் குத்திவிட்டு தப்பியோடி விட்டாராம். பலத்த காயமடைந்த மனுஷியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இதுகுறித்து வியாழக்கிழமை மனுஷியாவின் தாய் கனகவள்ளி அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து தலைமறைவான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai