Enable Javscript for better performance
வருவாய்த் துறை அலுவலர்கள் 2ஆம் நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் வட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆம் நாளாக வியாழக்கிழமையும் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய்த் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் வட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து 48 மணி நேர போராட்டதில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
    இதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடங்கினர். 2ஆம் நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலக பணிகள் முடங்கின. இதனால் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai