Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தஞ்சாவூர் ரயிலடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம். சக்திவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்படுகிறது. தற்போது இச்சேவையில் 4,300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இச்சேவை அரசு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது.
    மேற்கண்ட நிறுவனம் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணிகள் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்புக்கான பணத்தை ஒப்பந்தப்படி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் தவக்குமார், ராஜேந்திரன், ஜெயசங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai