சுடச்சுட

  

  சரசுவதி மகால் நூலகத்தில்  ஜூன் 29, 30-இல் சம்ஸ்கிருத கருத்தரங்கம்

  By DIN  |   Published on : 14th June 2018 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் சம்ஸ்கிருத தேசியக் கருத்தரங்கம் ஜூன் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து ஆட்சியரும், நூலக இயக்குநருமான ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
  இந்நூலகத்தில் சம்ஸ்கிருத மொழிப் பிரிவில் சுமார் 40,000 சுவடிகள் உள்ளன. இவற்றில் இருந்து 500-க்கும் அதிகமான பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
  சுவடிப் பதிப்புகளுக்கு உறுதுணையாகவும், பல்வேறு வகை ஆய்வாளர்கள் பயன் பெறும் வகையிலும் ஜூன் 29-ம் தேதி காலை ஆகமமும், பிற்பகல் சிற்பமும்,  30-ஆம் தேதி காலை ஆயுர்வேதமும்,  பிற்பகலில் சோதிட இயலும் என இரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதற்கு ஆர்வலர்கள், ஆய்வாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  கட்டுரையாளர்களுக்கு மட்டும் பதிவுக் கட்டணம் ரூ. 500. தொலைவில் இருந்து வரும் கட்டுரையாளர்களுக்கு மட்டும் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுள்ள ரயில் போக்குவரத்து செலவு, தங்க இட வசதி போன்றவை செய்து தரப்படும்.
  இக்கருத்தரங்கத்துக்கு சம்ஸ்கிருத துறை சார்ந்த சைவம்,  வைகானஸம்,  பாஞ்சராத்திரம், சாக்தம் ஆகிய ஆகமங்கள், சித்திரகர்மம், மூர்த்தி கல்பனம், வாஸ்து போன்ற சிற்ப சாஸ்திரங்கள், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், பொது மருத்துவம் போன்ற மருத்துவங்கள், ஜாதகம், ரேகை, நாடி போன்ற சோதிடச் செய்திகள் தொடர்பான பொருண்மைகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
  இக்கட்டுரைகள் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் சுய விவர விண்ணப்பத்துடன் ரூ. 500-க்கான காசோலையுடன் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் 613 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களும், கட்டுரைகளும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 20. பெயர், முகவரி, கல்வித் தகுதி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் கலந்து கொள்பவர் அல்லது கட்டுரை அளிப்பவர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 234107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai