தகுதி வாய்ந்த கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்

தகுதி வாய்ந்த நெல் கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என நெல் கொள்முதல் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தகுதி வாய்ந்த நெல் கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என நெல் கொள்முதல் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க தஞ்சை மாவட்ட நெல் கொள்முதல் பணியாளர்களின் கூட்டம் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். 
மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், மாநில செயலாளர் சி. பாலையன் மாவட்ட பொருளாளர் எஸ். தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: 
நெல் கொள்முதல் நிலையங்களில் குறிப்பாக  பாபநாசம் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச்  செல்ல வேண்டும்.  
தகுதியான கொள்முதல் பணியாளர்களின் பட்டியல் அனுபப்பட்டும், அந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தவில்லை. அவர்களை உடனடியாக நிரந்தர பணியாளர்களாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் ஏற்றி செல்வதற்கு நிர்வாகம் கொடுக்கின்ற வாடகையைவிட லாரிக்கு ரூ. 1,500 வரை மாமூல் கேட்கப்படுகிறது. இதை நிர்வாகம் தடுக்காமல் ஆதரவாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.  இதை தடுத்து நிறுத்தி முறைப்படுத்த வேண்டும்.
ஆய்வுக்கு வரும் விழிப்புக்குழு மற்றும் தரகட்டுப்பாடு அதிகாரிகள்,  தர வேறுபாடு எடை இழப்பு என குறைந்த சம்பளம் பெறுகின்ற பணியாளர்களிடம் அதிகளவில் இழப்பு தொகை வசூலிக்கும் முறையை கைவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com