சுவாமிமலை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.11.60 லட்சம் முறைகேடு

சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.11.60 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என

சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.11.60 லட்சம் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என கும்பகோணம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மாரீஸ்வரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் கொடுத்துள்ள புகார் மீது துறைரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.11.60 லட்சம் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை அதன் செயலாளர் செல்வம் திருப்பி செலுத்தினாலும் கூட துறைரீதியான நடவடிக்கையில்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல,  தேவராயன்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த ரூ.12 லட்சம் முறைகேடு தொடர்பாக கூட்டுறவு சார் பதிவாளர் சந்தானலட்சுமி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில் வாடிக்கையாளர்கள் செலுத்திய சிறுசேமிப்பு தொகையில் இருந்து ரூ.12 லட்சம் கையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்ட செயலாளர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் திருவாரூர் கிளையில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை ரூ.2 கோடி வரை மேலாளர் உட்பட 11 பேர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. கூட்டுறவு சார் பதிவாளர் பன்னீர்செல்வம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையின் முடிவில், வெளிவரும் உண்மையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாரீஸ்வரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com