Enable Javscript for better performance
அகரமாங்குடியில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அகரமாங்குடி ஊராட்சி சேவை மையக் கட்டட வளாகத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர்,விதவை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட இனங்கள் தொடர்பான 50-க்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். மண்டலத் துணை வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அருள்பிரகாசம்,வட்ட துணை ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி,வருவாய் அதிகாரி அசோக்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    பேராவூரணி அருகே அம்மா திட்ட முகாம்
     பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் தர்ஷனா, விஏஓ பிருந்தா மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். முதியோர் ஓய்வூதியம் கேட்டு 15 மனுக்கள் அளிக்கப்பட்டது. பரிசீலனைக்கு பிறகு தகுதியுள்ளவர்களுக்கு உத்தரவு வழங்கப்படும் என தாசில்தார் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai