Enable Javscript for better performance
ஒரத்தநாட்டில் காசநோய் விழிப்புணர்வு உறுதியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    தலைமை மருத்துவர் இந்திரா தலைமை வகித்தார். மருத்துவர்கள் வெற்றிவேந்தன், அனுஷா, சித்த மருத்துவர் ஷர்மிளாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில் காசநோய் அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு, சளியின் ரத்தம் வருதல், மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் காசநோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மாத்திரையுடன் மத்திய அரசு ரூ. 500 உதவித்தொகையும், மாநில அரசு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1000 உதவிதொகையும் வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார் உறுதிமொழியை வாசிக்க, மருத்துவர்கள் மற்றும் காசநோய் மேற்பார்வையாளர்கள் ராஜேஷ், விஜயகுமார், சாய்பிரியா, செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai