Enable Javscript for better performance
குடந்தை வீரசைவ பெரிய மடத்தில் குருபூஜை விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள வீர சைவ மடத்தைத் தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ முருக பிரம்ம தர்க்க சாரங்க தேசிகேந்திர சுவாமிகள், இங்கேயே இறைதொண்டு புரிந்து ஜீவசமாதி அடைந்தார்.
    இவர் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆனதால் அன்றைய தினம் குருபூஜை விழாவாக நடத்தப்படுகிறது.
    இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு லிங்கதாரணம், குரு மகா சன்னிதானம் மகாமக குளம் தீர்த்தம் வலம் வருதலும், வீரபத்திர சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், காலையில் வீரசிங்காதன பீடத்தில் எழுந்தருளும் மகா சுவாமிக்கு பாத பூஜை செய்தலும், பாத தீர்த்த பிரசாதம் அருளுதலும் பின்னர் சுவாமி அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    அருளாசி வழங்கும் விழாவுக்கு மடத்தின் பீடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் தலைமை வகித்தார்.
    உஜ்ஜயினியைச் சேர்ந்த பீடாதிபதி சத்தர்மா சிம்காசனாதீஸ்வர ஜகத்குரு சித்தலிங்க ராஜா தேசிகேந்திர சிவாச்சார்ய பகவத் சுவாமிகள் இஷ்டலிங்க பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    அப்போது லிங்கதாரணம் செய்து கொண்ட பக்தர்களும் இஷ்டலிங்க பூஜை செய்து வழிபட்டனர்.
    பெங்களூரு கவுத மடம் சாந்தவீர மகா சுவாமிகள், விழுப்புரம் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், விருத்தாசலம் குமார தேவர் மடம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சார்ய மகா சுவாமிகள், புதுச்சேரி அம்பலத்தாடும் திருமடம் கனகசபை சுவாமிகள் உள்பட தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவாவடுதுறை ஆதீனத்தின் உபயமாக பக்தர்களுக்கு மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. தெய்வ சேக்கிழார் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
    தொடர்ந்து மாலை தாராசுரம் வீரபத்திர சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், ஓட்டகூத்தர் சமாதி வழிபாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai