Enable Javscript for better performance
தஞ்சாவூரில் நாளை அமமுக உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
    இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலரும், கழகப் பொருளாளருமான எம். ரெங்கசாமி, தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது.
    இதில், பல்வேறு விவசாய சங்கங்களும், மாநில முழுவதுமிருந்து விவசாயிகளும் பங்கேற்கின்றனர். தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டப் பிரிவு நிர்வாகிகள் உள்பட அனைத்து பிரிவுகள், கிளைகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai