Enable Javscript for better performance
நாதன்கோவில் கோயிலில் நாளை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுக்லபட்ச அஷ்டமியை முன்னிட்டு மார்ச் 25 ஆம் தேதி ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடைபெற உள்ளது.
    இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த புராண தலம் என்ற சிறப்பும் உடையது.
    நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதமிருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது.
    இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்ல பட்ச ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி, மார்ச் 25-ஆம் தேதி வளர்பிறை அஷ்டமி என்பதனால் செண்பகவல்லி தாயாருக்கு காலை ஸ்ரீசூக்த அஷ்டமி ஹோமும், தொடர்ந்து மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடும் நடைபெறவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai