Enable Javscript for better performance
பட்டீஸ்வரத்தில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய டாக்டர் குருமூர்த்தி நினைவு தின ரத்ததான முகாம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புனிதவதி தலைமை வகித்தார். மருத்துவர்கள் பிரிசில்லா, சைமன்அலெக்ஸாண்டர், சர்மிளாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.
    இதில் மருத்துவமனை பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், அன்னை கல்லூரி சுகாதார ஆய்வாளர் (பயிற்சி), பயிற்சி செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai