Enable Javscript for better performance
பட்டுக்கோட்டையில்1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில்1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 1 கோடி பேரிடம் கோரிக்கை படிவத்தில் கையெழுத்து பெறும் இயக்கம் பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். முருக பெருமானின் ஆறுபடை வீடுகள் அமைந்துள்ள 6 ஊர்களை முழு சுகாதார நகரங்களாக உருவாக்கி, அவற்றை புனித
    நகரங்களாக அறிவிக்க வேண்டும்.
    இந்து கோயில்களில் பக்தர்களை பாகுபடுத்தும் கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளை ரத்து செய்து, இறைவன் சன்னதியில் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    வழக்குரைஞர் ஏ.ஜி. மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, பட்டுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது.
    இதுகுறித்து தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை நிறுவனர் ஆதி.மதனகோபால் கூறியது: 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியுள்ளோம். வரும் மே மாதம் 7 ஆம் தேதி பழனியில் தொடங்கி, சென்னைக்கு நடைபயணமாகச் சென்று, ஜூன் 1 ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் 1 கோடி பேர் கையெழுத்திட கோரிக்கைப் படிவங்களை அளிக்க இருக்கிறோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai