Enable Javscript for better performance
பட்டுக்கோட்டை ஹவுசிங்யூனிட் விநாயகர் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை ஹவுசிங்யூனிட் விநாயகர் கோயில் குடமுழுக்கு

    By DIN  |   Published on : 24th March 2018 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு, ஹவுசிங் யூனிட் வளாகத்திலுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் ரூ. 7.15 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
    விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
    வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளுடன் கடம் புறப்பட்டு காலை 10 மணிக்கு எஸ்.கணேசன் சிவாச்சாரியார் கோயில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் அ. பூவலிங்கம், செயலர் வீரமணி,
    பொருளாளர் எஸ். கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு பட்டுக்கோட்டை ராஜப்பா தலைமையில் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai