Enable Javscript for better performance
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவையொட்டி அடிப்படை வசதிகள் செய்து தருதல், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மார்ச் 25-ல் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவைத் தொடர்ந்து ஏப். 2,3,4-களில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் பாபநாசம் பேருராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள்,குடிநீர் உள்ளிட்டவை வழங்குதல் குறித்தும், பாபநாசம் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தருதல் குறித்தும் மின் துறை மூலம் வசதி செய்து கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
    இதில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் நா. மனோகரன்,பாபநாசம் புனித செபஸ்தியார் தேவாலய உதவி பங்குத் தந்தை, வருவாய் அதிகாரி பிராங்ளின், பாபநாசம் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி,சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன், மின்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai