Enable Javscript for better performance
பேராவூரணி குமரப்பா பள்ளியில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இப்பள்ளியில் ஆண்டுதோறும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் ஜி.ஆர். ஸ்ரீதர் பேசுகையில், மாணவர்கள் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருப்பது மிக அவசியம். அந்த வகையில் இப்பள்ளி இவ்விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது என்றார். அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல், மதிய உணவு வழங்கப்பட்டது. பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், அஸ்வின்ஸ்ரீதர், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மாணவர்கள் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai