Enable Javscript for better performance
'மார்ச் 30-இல் நடராஜன் படத் திறப்பு விழா'- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த ம. நடராஜனின் படத் திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
    தஞ்சாவூர் தமிழ் அரசி மண்டபத்தில் நடராஜன் பட திறப்பு நிகழ்ச்சி மார்ச் 30 காலை 10 மணிக்கு நடைபெறும். முக்கியத் தலைவர்கள் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
    ஜெயலலிதா மறைவு தொடர்பாக நடத்தப்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனைவியைத் துணைச் செயலராக நியமித்துள்ளனர். இந்த விசாரணை ஆணையம் நியாயமான முறையில் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான். எனவே, சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்போதுதான் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரிவர் என்றார் தினகரன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai