Enable Javscript for better performance
அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் வட்டம்,  அய்யம்பேட்டையில் பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயில்  திருத்தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அய்யம்பேட்டை கிருஷ்ணன் கோயில் என அழைக்கப்படும் ருக்மணி, சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்த விழா நாள்களில் நாள்தோறும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
    விழாவில் கடந்த 28ஆம் தேதி வசந்த உற்சவமும், 29ஆம் தேதி  வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ருக்மணி,  சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சுவாமி எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரோட்டம் நடைபெற்றது.
    தேர் நான்கு ராஜவீதிகள் வழியாக  சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. மாலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai