Enable Javscript for better performance
கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே கண்டியூரில் அரசாப விமோசன பொருமாள் கோவில் பங்குனி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 25-ம் தேதி கருட சேவை உற்ஸவம் நடைபெற்றது. இந்த விழாவின் 9-ம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரசாப விமோசன பெருமாள் எழுந்தருளினார். பின்னர், மேள தாளம் முழங்க, வான வேடிக்கையுடன் நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரை பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏப். 6-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த விழா ஏப். 8-ம் தேதி நிறைவடைகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai