Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: ஏப்.2-இல் பட்டுக்கோட்டை அஞ்சலகத்தை முற்றுகையிட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: ஏப்.2-இல் பட்டுக்கோட்டை அஞ்சலகத்தை முற்றுகையிட முடிவு 

    By DIN  |   Published on : 31st March 2018 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.2 ஆம் தேதி பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சி,  அனைத்து தொண்டு அமைப்புகள் மற்றும் மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
    இந்தக் கூட்டத்தில்தான் மேற்கண்ட தீர்மானம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்ய வேண்டும்
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.2 ஆம் தேதி பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது. நாசகார திட்டமான நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசு மற்றும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை வன்மையாகக் கண்டிப்பது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
    தமிழ் அறம் அமைப்பின் தலைவர் சி.ராமசாமி, கலாம் நண்பர்கள் கூட்டமைப்புத் தலைவர் எம்.பாலமுருகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலர் தம்பி.ரமேஷ், தேமுதிக நகரச் செயலர் பி.அருணாசலம்,  தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ஏ.கே.குமார்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நகரத் தலைவர் ராஜா,  கண்டியன் தெரு ஜெ.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் எம்.சுதாகர், எல்சி 94 ரயில்வே கேட் பயனீட்டாளர்கள் நலச்சங்க அமைப்பாளர் ஜெ.மார்ட்டின் ரெக்ஸ்,  கிறிஸ்துவ நல்லிணக்க இயக்கத்தின் மாவட்ட துணைச்செயலர் எம்.எஸ். நெப்போலியன், மதிமுக மாவட்ட பிரதிநிதி பழ.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai