Enable Javscript for better performance
குடந்தையில் பாமகவினர் ஆற்றில் இறங்கி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் பாமகவினர் வெள்ளிக்கிழமை இறங்கி, கையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசும், அழுத்தம் கொடுக்காத தமிழக அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai