Enable Javscript for better performance
குடந்தை சாஸ்த்ரா வளாகத்தில் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    குடந்தை சாஸ்த்ரா வளாகத்தில் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா

    By DIN  |   Published on : 31st March 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் "தீட்டா 18' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
    தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் டி.என். சங்கரன் தொடங்கி வைத்தார். 
    மின்னியல், மின்னணுவியல், மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், குறும்படம், இயந்திரவியல் ஆகிய 9 பிரிவுகளில் 60-க்கும் அதிகமான போட்டிகள் நடைபெறுகின்றன. 
    இப்போட்டிகளில் தமிழகம், ஆந்திரம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
    விழாவுக்கு சீனீவாச ராமானுஜன் மையப் புலத் தலைவர் வி. ராமசாமி தலைமை வகித்தார். விழாவின் அமைப்பாளர் டி. ராதாகிருஷ்ணன், பேராசிரியர் அல்லிராணி, மாணவர் ஒருங்கிணைப்பாளர் சேதுகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai