Enable Javscript for better performance
தஞ்சாவூரில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
    பேராலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு ஆகியவை நடைபெற்றன.
    இறைமக்கள் பாடுபட்ட சொரூபத்தை மண்டியிட்டு முத்தி செய்து ஆராதனை செய்தனர். தொடர்ந்து, சிலுவை பாதை வழிபாடும், மரித்த ஆண்டவரின் திருவுடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல மாதா ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
    இந்த பவனியில் இறைமக்கள் கையில் எரியும் திரியுடன் ஜெபித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் சென்றனர். இயேசுவின் திருவுடல் வியாகுலமாதா ஆலயத்தில் சனிக்கிழமை (மார்ச் 31) முழுவதும் ஆராதனைக்கு வைக்கப்படுகிறது.
    நிகழ்ச்சியில் பேராலயப் பங்குத் தந்தை செபஸ்டின் பெரியண்ணன், உதவித் தந்தை ஆரோக்கிய பரிசுத்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    திரு இருதய பேராலயத்தில் இரவு 10.30 மணியளவில் ஆயர் தலைமையில் புது நெருப்பு புனிதம் செய்யும் சடங்கு,  ஈஸ்டர் பெருவிழா,  கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. பின்னர் புனித வியாகுல மாதா ஆலயத்தின் முன்புறம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. 
    மாதாகோட்டை:  இதேபோல,  மாதாகோட்டை லூர்து சகாய அன்னை ஆலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில், அருட் தந்தை அலெக்ஸ் அடிகளார், பங்குத் தந்தை பிரிட்டோ அடிகளார், ஆரோக்கிய ஆண்டனி ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai