Enable Javscript for better performance
பட்டுக்கோட்டையில்  டெமு பயணிகள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில்  டெமு பயணிகள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டை - காரைக்குடி வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் வெள்ளிக்கிழமை 1 நாள் மட்டும்  டெமு பயணிகள் ரயில்,  மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. 
    இந்த ரயில் காரைக்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு புறப்பட்டு கண்டனூர் புதுவயல், பெரியக்கோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயிங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு ஆகிய ஊர்கள் வழியாக மதியம் 12.45 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேர்ந்தது. 
    அறந்தாங்கி, பேராவூரணி, ஒட்டங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் தலா 2 நிமிஷமும், இதர ரயில் நிலையங்களில் தலா 1 நிமிஷமும் நின்று சென்றது. 
    இந்த ரயிலில் பயணித்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகள்,  ரயில்வே உயர் அதிகாரிகள் வந்திறங்கினர். 
    அப்போது அவர்களை வரவேற்று பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர்,  மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி, ரயில் நிலையத்துக்கு வெளியே பட்டாசு வெடித்து, டெமு பயணிகள் ரயிலை உற்சாகமாக வரவேற்றனர்.  
    பின்னர் டெமு பயணிகள் ரயில் பட்டுக்கோட்டையிலிருந்து பகல் 3 மணிக்கு காரை க்குடிக்கு புறப்பட்டது. 
    அப்போது ரயில் ஓட்டுநர், கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே அலுவலர்களுக்கு பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன் சால்வை அணிவித்தார்.  
    விரைவில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும், இப்பாதையில் தினமும் 2 ரயில்கள் இயக்கப்படும்  என்றும் தெரிகிறது.

    மக்கள் மகிழ்ச்சி
    பேராவூரணியில்... 
    காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இயக்கப்பட்ட டெமு பயணிகள் ரயிலுக்கு பேராவூரணியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பேராவூரணிக்கு காலை 11.45 மணிக்கு வந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் மற்றும் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.  இரண்டு நிமிடம் நின்ற பின்பு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு 12.40  மணிக்கு சென்றடைந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ரயில் போக்குவரத்து காரணமாக இப்பகுதி மக்கள்,  வர்த்தகர்கள், மாணவர்கள், ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்பு தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai