Enable Javscript for better performance
மகாமகக் குளத்தில் தெப்ப உற்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திர விழாவையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் தெப்ப உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆண்டுதோறும் ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மகாமகம் குளத்தில் பங்குனி உத்திர தெப்போற்சவம் ஏகதின விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மங்களாம்பிகை மலை மகளாக வீற்றிருக்க சரஸ்வதி, லட்சுமியும் கலை மகள், அலை மகளாக வெண் சாமரசம் வீசும் காட்சியும் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது. குளத்தில் 6 அடி தண்ணீர் இருந்தால்தான் சுழலும் தெப்பம் விடும் நிலை இருந்தது. வியாழக்கிழமை வரை மூன்றரை அடி வரை தண்ணீர் இருந்ததால் காசி விஸ்வநாதர் கோயில், நகராட்சி சார்பில் இரண்டரை அடி தண்ணீர் புதிதாக விடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை தெப்பம் குளத்தைச் சுற்றி வந்தது.
    மூன்று அம்பாள்களும் முப்பெருந்தேவியர்களாகத் தெப்பத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் மகாமகக் குளத்தை வலம் வந்து வழிபட்டனர். பின்னர் இரவு மின்னொளி அலங்காரத்துடன் இரு முறை வலம் வந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai