Enable Javscript for better performance
மாணவர் இயக்கத்தினர் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுப் பதவி விலக வேண்டும். அழுத்தம் கொடுக்காமல் இருந்த மாநில அரசுப் பதவி விலக வலியுறுத்தியும், தமிழகத்துக்குத் தண்ணீர் தர தொடர்ந்து மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    தமிழ்நாடு மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதனால், ஏறத்தாழ 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 34 பேரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai