Enable Javscript for better performance
1,976 மது பாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மகாவீரர் ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுக்கூடங்கள் வியாழக்கிழமை மூடப்படும் என ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 
    இதையொட்டி, மதுபானங்கள் சட்டத்துக்குப் புறம்பாக விற்கப்படுகிறதா என கலால் துறை உதவி ஆணையர் இன்னாசிமுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருஞானம், மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சரஸ்வதி, உதவி ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
    அப்போது, தஞ்சாவூர் பூக்காரத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகேயுள்ள இடத்தில் விற்பனை செய்வதற்காக 41 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,968 பிராந்தி பாட்டில்கள் (180. மி.லி. கொள்ளளவு கொண்ட), 8 பீர் பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அங்கிருந்த குமாரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai