Enable Javscript for better performance
அடையாளம் தெரியாத  வாகனம் மோதி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் அடையாள தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    பண்ருட்டி மேலகவரப்பட்டு ஆர்கே பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் சிவராஜ்(37). ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான லாரியில் அளவுக்கதிகமாக சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணத்துக்கு வந்து கொண்டிருந்தார். 
    புதன்கிழமை இரவு  கும்பகோணத்தை அடுத்த தென்னூருக்கு வந்த இவரது லாரியை  வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  பறிமுதல் செய்தார். பிடிபட்ட லாரியில் உள்ள சிமென்ட் மூட்டைகளை எடுத்து செல்வதற்காக மற்றொரு லாரியில் வந்த சிவராஜ்,  நள்ளிரவைத் தாண்டியதால் லாரியிலேயே படுத்துள்ளார். தொடர்ந்து இயற்கை உபாதையைக் கழிக்க, அப்பகுதியில் உள்ள சாலையை சிவராஜ் கடக்க முயன்றபோது,  அடையாள தெரியாத வாகனம் மோதி, நிகழ்விடத்திலேயே இறந்தார். பட்டீஸ்வரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai